பாடசாலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்படவில்லை!

பாடசாலைகள் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

“முதற்கட்டமாக கபொத உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஜூன் முதலாம் திகதி அனைத்து வகுப்புகளுக்கும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும், மே 11ஆம் திகதி தொடக்கம் ஆசிரியர்கள், அதிபர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது. பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக, எந்த சுற்றறிக்கையும், கல்வி அமைச்சின் செயலாளரினால், மாகாண கல்வி அமைச்சுகளுக்கு அனுப்பப்படவில்லை.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி தொடர்பாக, சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்படும், என்றும், கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!