என் பேச்சை கேற்காததால் இன்று அவஸ்த்தைப்படும் அரசாங்கமும் மக்களும் – சஜித் ஆவேசம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவ ஆரம்பித்த நேரத்தில் தான் முன்வைத்த யோசனைகளுக்கு அமைய செயற்பட்டிருந்தால், தற்போது இலங்கையில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதனை தான் முதலில் கூறிய போது தன்னை பார்த்து சிரித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினர் சுகாதார துறைக்குள் சென்றதால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமும் சீர்குலைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளம் வழியாக இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் அடையாளம் காணப்பட்ட சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்துமாறும் , உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இலங்கை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

எனினும் அப்போது இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அப்படியான பரிசோதனைகளை நடத்தும் தேவையில்லை எனவும் கூறியிருந்தார். அத்துடன் எதிர்க்கட்சி வீணான அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!