இணைந்து செயற்படத் தயார் – சம்பந்தனுக்கு இந்திய தூதுவர் உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராகப் பதவியேற்றுள்ள, கோபால் பக்லே உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் கோபால் பக்லே, நேற்றுக் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இணையவழியாக, தனது நியமன சான்றிதழ்களை கையளித்த, பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்இ.

இதன்போது , தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக இருப்பதாக இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று, இந்தியத் தூதுவருக்கு இரா.சம்பந்தன் உறுதியளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!