சீனாவுடன் உறவு துண்டிப்பு: டிரம்ப் எச்சரிக்கை.

கொரோனா வைரசை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டி: சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச விரும்பவில்லை. சீனா மீது அதிருப்தியில் உள்ளேன். தற்போது அதனை கூறுகிறேன் என்றார்.

சீனாவுக்கு எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்: சீனாவுக்கு பதிலடியாக எங்களால் பல விஷயங்கள் செய்ய முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் வந்தது. அதனை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!