கிணறுகள் வற்றியதால் சுனாமி பீதி! – மட்டு., அம்பாறையில் ஓட்டம் பிடித்த மக்கள்.

மட்டக்களப்பில் கல்லாறு, குருமன்வெளி பிரதேசத்தில் சில கிணறுகளில் நீர் மட்டம் நேற்றிரவு சடுதியாக குறைந்தது. இதனையடுத்து மக்கள் சுனாமி போன்ற அனர்த்தம் இடம்பெறப் போகின்றது என அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்தச் செய்தி காட்டுதீபோல பரவியதையடுத்து மட்டக்களப்பு கல்லடி அம்பாறை மாவட்ட கரையோரத்திலுள்ள பல பகுதிகளில் இருந்து மக்கள் அச்சத்தினால் வீடுகளை விட்டு வெளியேறினர்.

எனினும், சுனாமி வருவதற்கான எந்த விஞ்ஞான ரீதியான அறிகுறியும் இல்லை என்றும், எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை, வதந்திகளை நம்பவேண்டாம் என்று அனர்த்த இடர் முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்துள்ளார்.

“தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் குறையும்போது கரையிலுள்ள நீர் மட்டங்களை கடல் உள்வாங்கும். அதனால் இது ஒரு சாதாரண நிலை. கிணற்றில் நீர் மட்டம் குறைவது கூடுவது நாங்கள் முதலில்; இதனை கவனித்திருக்க மாட்டோம். இது இரவில் இடம்பெறும் ஒன்று. இப்போது நாங்கள் எதே ஒரு பிரச்சனை என்றதும் கிணற்றை பாத்து தண்ணீர் குறையுது கூடுது என்று எனவே பயப்படதேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!