ராஜபக்‌ஷக்களின் ஊழல் மோசடி, மனித உரிமைமீரல் தொடர்பில் சட்டத்தின் முன்நிறுத்த சஜித்தின் நிழல் அமைச்சரவை?

சஜித் பிரேமதாச தலைமையில் நிழல் அமைச்சரவையை உருவாக்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே இது பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அவை குறித்து ஆராய்வதற்குமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் நடைபெறும் கூட்டத்தில் இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூட்டுஎதிரணி தலைவராக இருந்தபோது நிழல் அமைச்சரவையொன்று அவர் தலைமையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!