கொழும்பில் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம்! தொற்று நோய் பிரிவு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கொழும்பு நகரத்தில் பணிக்காக வரும் போதும் மீண்டும் வீடு செல்லும் போது பொது இடங்களில் எச்சில் துப்புவதனை தவிர்க்குமாறு கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் பிரிவு வைத்தியர் தினூக்கா குருகே தெரிவித்துள்ளார்.

நகரத்தில் கண்ட இடங்களில் எச்சில் துப்பினால் கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்து அதிகமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது இடங்களில் எச்சில் துப்பினால் பணிக்காக செல்லும் இன்னும் ஓரு குழு மக்களின் பாதணிகளில் மிதிக்கப்படுகின்றது. அதனை மிதித்தவாறு வீடுகள் அல்லது தொழில் செய்யும் இடங்களுக்கு செல்லும் ஆபத்துக்கள் உள்ளது.

தற்போது கடமைகளுக்காக பல ஊழியர்கள் கொழும்பிற்கு வருகின்றனர். எனினும் இதற்கு முன்னர் நீங்க நினைத்த இடங்களில் எச்சில் துப்பியிருக்கலாம். வெற்றிலை போட்டு எச்சில் துப்பியிருக்கலாம். எனினும் இனி அந்த வேலையை செய்ய வேண்டாம்.

அவ்வாறு செய்தால் மீண்டும் கொரோனா வைரஸ் கொழும்பில் பரவ கூடும். தற்போது ஓரளவிற்கு கொழும்பில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பிற்கு பணிக்காக வருபவர்கள் எச்சில் துப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். இந்த தவறான செயற்பாட்டினை நிறுத்தவில்லை என்றால் சிக்கலுக்குள்ளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!