அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

அரசாங்கம் பலவந்தமாக அரச ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உள்ளதாக கூறி, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் , இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.

நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக இந்த முறைப்பாட்டை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா நிதியத்திற்கு எனக் கூறி அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களிடம் சம்பளம் வெட்டப்படடுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் இதனை எதிர்த்த போதிலும் அரச நிறுவனங்களின் பிரதானிகள் எந்த பதில்களையும் வழங்காது அமைதியாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அரச நிறுவனங்கள் தொடர்பான சட்டம் மற்றும் நிதி சட்டத்திட்டங்களுக்கு அமைய விருப்பமின்றி அரச ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தங்களை செய்ய முடியாது எனவும் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!