பொது தேர்தல் இல்லை. பாரளுமன்றம் இல்லாத ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கையில்?

கொரோனா வைரஸ் தொற்றிய இறுதி நோயாளியும் குணமடைந்து இரண்டு வாரங்களின் பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான அஜித் மன்னப்பெரும இதை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

நான் நாட்டின் பொது நிலைப்பாட்டுக்காக குரல் கொடுக்கின்றேன். இதனால், இறுதி கொரோனா நோயாளி குணமடைந்து, கொரோனா நோயாளிகள் எவரும் இல்லை என்ற நிலைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அஜித் மன்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பார்க்கையில் உலக சுகாதார அமைப்பு கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது இதுவும் ஒரு தொற்றாக கானப்படும் இதனுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அப்படியானால் கொரோனா எப்படியும் மற்றைய தொற்றைபோல இருக்கும் அதற்கான மருந்துகளை மானுடம் பாவிக்கவேண்டும் என பல செய்திகள் வருவதால் இவரின் கருத்தின்படி இலங்கையில் கொரோனா தொற்று எப்படி முடிவடையப்போவதில்லை ஆகவே தேர்தலும் நடக்கப்போவதில்லை இது தொடரும் பட்சத்தில் பாராளுமன்றம் இல்லாத ஜனாதிபதி ஆட்சி முறைதான் நடக்கும் என நகைச்சுவை கருத்துக்களை அரசியல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!