ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை- பாதகமாக மாறும்!

இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கூறியிருப்பது, இலங்கைக்கு பாதகமாக மாறலாம் என ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உரையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையையும், ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகத்தையுமே குறிப்பிட்டிருப்பார் என நான் கருதுகின்றேன்.

ஐநா குறித்து அவருக்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது அல்லது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக வைத்து அவர் அதனை தெரிவித்துள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது.

ஐநாவின் அமைப்புகளில் விலகுவது யுத்தவீரர்களை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு சர்வதேச ஆதரவு அவசியமாகவுள்ள தருணத்தில் இது இலங்கைக்கு பாதகமான விடயமாக மாறலாம்.

உலகளாவிய செல்வாக்குள்ள வெளிநாட்டு ஊடகங்கள் ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளன

இந்த அறிக்கையில் என்ன பிரச்சினையுள்ளது? இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடில்லை , மாறாக அது பார்வையாளர் அந்தஸ்த்து மாத்திரமே உள்ள நாடு .

இதன்காரணமாக நான் விலகுகின்றேன் என்ற கேள்வியே எழவில்லை. மேலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐநாவின் ஒரு பகுதி, ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் ஒரு துணை அமைப்பு. பொதுச்சபையே மனித உரிமை பேரவைக்கான உறுப்பினர்களை தனது உறுப்பு நாடுகள் மத்தியிலிருந்து தெரிவு செய்கின்றது

. ஐக்கியநாடுகள் அமைப்பிலிருந்து விலகுவது மாத்திரமே ஐக்கியநாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து முற்றாக விலகுவதற்கான வழியாகும்.

இதேபோன்று ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவது என்றாலும் ஐக்கிய நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும். மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஐநாவின் ஒரு பகுதி, விசேடமான முகவர் அமைப்பல்ல.

ஐநா சாசனத்தின் படி பலதரப்பு என்ற அம்சத்தினை பாதுகாக்ககூடிய ,அதன் மூலம் எங்களை போன்ற வலுகுறைந்த நாடுகளின் நலன்களை பாதுகாக்க கூடிய ஒரு உலகளாவிய பலதரப்பு அமைப்பிலிருந்து விலகுவது என இலங்கை சிந்திப்பதே விபரீதமானது

ஐநாவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட உலக ஒழுங்கு- பல பலவீனங்களை கொண்டுள்ள போதிலும், வலுக்குறைந்த நாடுகளினதும்,எங்களை போன்ற காலனித்துவ நாடுகளினதும் இறைமையை வெளிச்சக்திகளின் ஆக்கிரமிப்பு,அத்துமீறல், யுத்தத்திலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு உலக ஒழுங்காக காணப்படுகின்றது.

அமெரிக்காவின் பல்வேறுபட்ட ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளின் மத்தியில் – இறைமையுள்ள நாடுகள்கொள்கைகளை மாற்றிக்கொள்வதற்காக தடைகள்;, தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் நிபந்தனைகள், மிரட்டல்கள் மூலம் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது, போன்றவை- இந்த அமைப்பினை பலப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்தக்கூடாது.

அணிசேரா அமைப்பு நீண்டகாலமாக போரிட்ட , முன்னாள் காலனித்துவநாடுகளின் நலன்களை முன்னேற்றுவதற்கு வழிவகுத்த, பல்தரப்பு அம்சத்தினை பலவீனப்படுத்தும் ,அமெரிக்காவின் மேலாதிக்க உலகம் பற்றிய ஒரு தலைப்பட்சமான நோக்கத்தை ஐநாவிலிருந்து வெளியேறுவது மேலும் பலப்படுத்தும்.

ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளை முன்னிறுத்தும் போக்கு பலவீனப்படுத்த படுத்த முயலும் அதே கொள்கைகளை காப்பாற்றும் நோக்கத்தில், விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த யுத்த வீரர்களின் நிகழ்வில் ஜனாதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பொருத்தமற்றது.

ஆபிரிக்கா ஆசியா இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள எங்களின் சகாக்கள் , அவர்களின் இறைமையுள்ள நாடுகள் என்ற உயிர்பிழைத்தல் ஐநா சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நோக்கங்களையும் கொள்கைகளையும் மதிப்பதிலேயே தங்கியிருக்கும் இந்த தருணத்தி;ல், சர்வதேச நோய் தொற்றின் மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் இதேபோன்று அச்சுறுத்தும சூழ்நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்தினை எவ்வாறு கருதுவார்கள்?’என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!