ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல்

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தற்போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த மாவட்டங்களில் தளரத்தப்பட்டுள்ளது.

எனினும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை நாடு தழுவிய ரீதியில் தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!