மோனாலிசா ஓவியத்தை விற்றாவது கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் – பிரான்ஸ் வர்த்தகர்!

மோனாலிசா படத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து கொரோனாவால் அழிந்துகொண்டிருக்கும் கலையுலகைக் காப்பாற்ற அறைகூவல் விடுத்துள்ளார் பிரான்ஸ் வர்த்தகர் ஒருவர்.

Fabernovel என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் Stephane Distinguin (46). கொஞ்ச நாட்களாகவே இந்த யோசனை தன் மனதில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் Stephane, கொரோனாவால் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவிலிருந்து அவர்களை காப்பாற்ற இது உதவும் என்கிறார்.

வேண்டுமென்றேதான் இந்த யோசனையை வெளியிட்டேன் என்று கூறும் Stephane, மோனாலிசாவை விற்றால்தான் என்ன என்கிறார்.

நாளுக்கு நாள் கிணற்றுக்குள் கல்லெறிந்து கிணற்றின் ஆழத்தை அறிய முயலும் சிறுவர்களைப்போல கொரோனாவால் ஏராளம் பணத்தை இழந்து கொண்டிருக்கிறோம், ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

ஒரு தொழிலதிபராக, ஒரு வரி செலுத்தும் குடிமகனாக, இந்த பணம் சும்மா வரவில்லை, அது கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய பணம் என்பது எனக்கு தெரியும்.

அப்படியானால் செலவிட்டுக்கொண்டே இருப்பதை விட, சில விலையுயர்ந்த பொருட்களை விற்று நமது எதிர்காலத்தை காப்பாற்றுவதே சிறந்தது என்கிறார் அவர்.

என்னைக் கேட்டால் மோனாலிசா ஓவியம் 50 பில்லியன் யூரோக்கள் விலைபோகும் என்று கூறும் Stephane, இல்லையென்றால் கூகுள், ஆப்பிள், பேஸ்புக், அமேசான், மைக்ரோசாஃப்ட், டிஸ்னி, நெட்ப்லிக்ஸ், அலிபாபா மற்றும் டென்செண்ட் போன்ற நிறுவனங்களால் தான் கலையை காப்பாற்ற முடியும் என்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!