தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை! – உயர்நீதிமன்றில் வாதம்

கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று, ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, உயர்நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையின் போதே, ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, மேற்படி வாதத்தை முன்வைத்துள்ளார்.

இந்த மனுக்களுக்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை என்றும், விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப் படவேண்டும் என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றும், கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணைக்குழு ஒரு சுகாதாரப் பாதுகாப்பு முறையை வகுத்து தேர்தல்களை நடத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் குறிபபிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!