யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

யாழில் கொரோனோ தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்றைய தினம் இரவு வீடு திரும்பியுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவர் கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகருடன் பழகியமையால் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.கொழும்பில் சுமார் 65 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

குறித்த நபருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருந்தமையால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தால் நீண்ட கால சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!