கலவர பூமியான அமெரிக்கா: வெளியான ஜோர்ஜ் ஃபிலாய்டின் உடற்கூராய்வு முடிவு!

அமெரிக்கா முழுவதும் கலவர பூமியாக மாற காரணமான கருப்பினத்தவரின் மரணம் தொடர்பில் அதிமுக்கிய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலால், இந்த போராட்டம் மேலும் இறுக்கமடையும் என அரசியல், சமூக நோக்கர்களால் கணிக்கப்படுகிறது. மேலும் உறுதியான ஒரு முவெடுக்க முடியாமல் ஜனாதிபதி டிரம்ப் பதுங்கு குழிக்குள் மறைந்திருப்பதும் கலவரம் மேலும் நீடிக்க வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

தற்போது ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பில் வெளியான உடற்கூராய்வு முடிவுகளில், ஜோர்ஜ் ஃபிலாய்ட் asphyxia காரணமாக அதாவது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் அவரது கழுத்து மற்றும் முதுகில் பலமாக அழுத்தியதால் ஜோர்ஜ் ஃபிலாய்ட் இறந்தார் என்று அவரது குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்ட மருத்துவ பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது கண்டறியப்பட்ட தகவலானது, மாவட்ட மருத்துவ பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகப்பூர்வ பூர்வாங்கமான உடற்கூராய்வில் இருந்து வேறுபடுகின்றன. கழுத்தில் ஏற்பட்ட அதிகமான அழுத்தம் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபட்டதாகவும், முதுகில் செலுத்திய அழுத்தம் அவருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது என, இந்த விவகாரம் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் ஃபிலாய்டின் குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்ட

நியூயார்க் நகரத்தின் முன்னாள் மருத்துவ பரிசோதகர் மைக்கேல் பேடன் தெரிவித்துள்ளார். இதனிடையே ஃபிலாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி தொடர்ந்து ஆறாவது நாளாக அமெரிக்கா முழுவதும், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் பல கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1960 காலகட்டத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் கண்டதில்லை என சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!