இந்தியாவின் பெயரை மற்றகோரிய மனு மீது இன்று விசாரணை!

நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும் இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவதுபோலவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கையாளும் அரசியலமைப்பு சட்ட 1ஆவது பிரிவில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!