இலங்கை இராணுவம் நிராகரித்தவருக்கு அமெரிக்க இராணுவம் இடமளித்தது!

இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள முடியாது என இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்ட இலங்கையரான அனுஜ் பூஜித குணவர்த்தன, அமெரிக்காவின் முன்னணி ஹெலிகொப்டர் தாக்குததல் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். அனுஜ் பூஜித இது தொடர்பில் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

18 வயதாக இருந்தபோது தாம் இலங்கை இராணுவத்தில் கடேட் அலுவலராக இணைவதற்காக சென்றபோது நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிய உடல் நிறை மற்றும் நெஞ்சின் அகலம் இல்லை என்பதன் காரணமாகவே தாம் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் படையினரின் சீருடையில் இருந்த தமது விருப்பம் காரணமாக மீண்டும் ஒரு வருடம் கழித்து தமது உடல்வாகுவை சரிசெய்துகொண்டு சென்றபோதும் தாம் நிராகரிக்கப்பட்டதாக அனுஜ் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குற்றப்புலனாய்வுத்துறைக்கு விண்ணப்பித்தபோது நேர்முகம் இல்லாமலேயே தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அனுஜ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இராணுவத்தின் சேரும் தமது ஆசைகளை விட்டு அமெரிக்கா செல்ல கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு சென்று படித்துக்கொண்டிருந்தபோது அங்குள்ள இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பாக பேசிக்கொண்டிந்தனர்.

இதன்போது தன்னை அமெரிக்க இராணுவத்தில் இணையுமாறு கேட்கப்பட்டது. இதன்போது எவ்வித தயக்கமும் இன்றி தாம் அதற்கு உடன்பட்டதாக அனுஜ் தமது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் எழுத்து மூலப்பரீட்சை மற்றும் உடல்பரிசோதனை என்பவற்றில் தாம் சித்தியடைந்தாக தெரிவித்துள்ள அனுஜ் தற்போது தாம் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர் முன்னணி தாக்குதல் பிரிவில் திருத்துநராக பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனுஜ் கொழும்பு அசோகா கல்லூரியின் பழைய மாணவர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!