இதற்காகத்தான் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்: ட்ரம்பின் செய்யலால் எரிச்சலடைந்த வெள்ளை மாளிகை அதிகாரி!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு ஜானதிபதி டிரம்பின் செயலால் அருவருப்பாக உணர்ந்ததாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி கூறியுள்ளார். கடந்த 25-ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதால், அமெரிக்காவில் போராட்டம் வெடித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. வெள்ளை மாளிகை வரை பரவிய நிறவெறி எதிர்ப்புப்போராட்டத்தில், அமைதிவழியில் போராட்டம் நடத்தியவர்களை அதிபர் டிரம்ப் பலவந்தமாக அப்புறப்படுத்தினார்.

ஏனெனில், வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித ஜான் தேவாலயத்தின் முன்னால் தன் கையில் பைபிளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக அமைதிப் போராட்டக் காரர்களை பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி உட்ப ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அதிகாரிகளுக்கும் கடும் எரிச்சலையும் அருவருப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. பெயர் கூற விரும்பாத அந்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி, நான் என்றுமே இப்படி அவமானமாக உணர்ந்ததேயில்லை.

நேர்மையாகவே நான் மிகவும் அருவருப்படைந்தேன், வெறுப்படைந்தேன். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் அவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தாங்களே பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இவரது பேச்சு அமெரிக்காவில் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது ஜனாதிபதி டிரம்பின் இந்தச் செயல் மட்டுமல்ல பல செயல்கள் அவர் நிர்வாக அதிகாரிகளிடையே கூட கடும் அருவருப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உதாரணமாக இந்த அதிகாரியின் கூற்று அங்கு பார்க்கப்படுகிறது.

இது போன்ற விஷயங்களையெல்லாம் பெயருடன் வெளியிட வேண்டும் என்று அந்த அதிகாரிக்கு பலரும் கூறிவருகின்றனர், ஆனால் பெயர் வெளியிட்டால் அதுதான் அவர் வெள்ளை மாளிகையில் பணி புரியும் கடைசி நாளாக இருக்கும் என்றும் பலரும் பெயர் வெளியிடாமைக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!