இராணுவத்தினருக்கு தொற்று ஆபத்து அதிகம்!

தனிமைப்படுத்தல் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் இராணுவத்தினர் மத்தியில் வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இராணுவத்தினர் மத்தியில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பனாகொட இராணுவமருத்துவமனை தயார்நிலையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!