இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர்,

‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

உங்களது வாக்குகளை கெடுக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இப்படி பொய் சொல்பவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.’ – என்றார்.

இந்நிலையில் இவ்வாறு கருத்துகூறியதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் நிலையை ஹூல் இழந்துள்ளார் என்று பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் ஹூல் அரசியல் செய்ய வேண்டும் அல்லது சுயாதீன உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் சப்ரி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!