நான்கு கட்டங்களாக பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும்!

எதிர்வரும் ஜூன் 29ம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளினதும் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும இன்று சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

விபரம்,

1ம் கட்டமாக ஜூன் 29ம் திகதி முதல் ஜூலை 3 வரையான காலப்பகுதியில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கான செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
2ம் கட்டமாக ஜூலை 6ம் திகதி முதல் ஜூலை 17 வரையான காலப்பகுதியில் 5ம்,11ம் மற்றும் 13ம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
3ம் கட்டமாக ஜூலை 20ம் திகதி 10ம் மற்றும் 12ம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
4ம் கட்டம் ஜூலை 27ம் திகதி 3ம், 4ம், 6ம், 7ம், 8ம் மற்றும் 9ம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் பின்னர் தீர்மானிக்கப்படும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!