தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது!

பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும், அரசியல்வாதிகளோ அல்லது அவர்களுக்கு துணையாக இருப்பவர்களோ அதுகுறித்து முடிவு செய்ய முயற்சிக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேரதலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை நேற்று வர்த்தமானியில் வெளியிட்ட பின்னரே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஓகஸ்ட் 08 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று சிலர் ஏற்கனவே கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மகிந்த தேசப்பிரிய, இந்த இரு திகதிகளில் தேர்தலை நடத்தினால் ஆணைக்குழு பக்கச்சார்பாக செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

திகதியை நாங்களே முடிவு செய்வோம் என்றும், எமது வேலையில் யாரும் தலையிடாதீர்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!