இணுவில், ஏழாலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று இல்லை!

இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணுவிலில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர், அண்மையில் நாடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கு இனங்காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இணுவிலில் அவர் தங்கியிருந்த மற்றும் ஏழாவையில் தொடர்பு வைத்திருந்த மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும்13 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் முடிவுகள் நேற்று கிடைத்துள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்திருப்பதாகவும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!