பிரான்சில் நேர்ந்த கொடூரம்: பாராட்டி கொடுக்கப்பட்ட பரிசு ஒருவரின் உயிரை பறித்த சோகம்!

பிரான்சில் கொரோனாவின் நடுவிலும் அயராமல் குப்பை அள்ளும் பணி செய்த ஒருவரை உற்சாகப்படுத்துவதற்காக உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் இரண்டு போத்தல் பியர் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பியர் அவரை தற்கொலை வரைக்கும் கொண்டு சென்றுவிட்டதுதான் துயரம். Caen என்ற பகுதியில் அவர் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டிருந்தார். 26 ஆண்டுகளாக அவர் அந்த பணியிலிருக்கிறார்.

அப்படியிருக்கும்போது, கொரோனாவின் மத்தியிலும் அயராது பணி செய்த அவரை உற்சாகப்படுத்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் இரண்டு போத்தல் பியர் கொடுத்துள்ளார். ஆனால், பணியிலிருக்கும்போது மது அருந்தியதாக கூறி அவரை பணி நீக்கம் செய்துள்ளனர் அவரது மேலதிகாரிகள்.

அதனால் மனம் நொந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது சகோதரர் கூறும்போது, ஹீரோவாக மதிக்கவேண்டிய ஒருவருக்கு இரண்டாவது வாய்ப்பு ஒன்று கொடுத்திருக்கலாம் என கண்ணீர் விடுகிறார். தற்போது அவரது குடும்பத்தார் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!