இ.தொ.கா பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.​

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைக்கால நிர்வாக சபை நுவரெலியா – ஹட்டன், கொட்டகலை பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் இன்று (17) காலை கூடியது.

இதன்போது பொது செயலாளராக ஜீவன் தொண்டமானும், பிரதி தலைவராக அனுஷியா சிவராஜாவும் நியமிக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!