முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை மறுப்பது மனிதஉரிமை மீறல்! – முதலமைச்சர் காட்டம்

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னால் கொண்­டு ­வ­ரப்­பட்ட அமைச்­ச­ரவைப் ­பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி நிரா­க­ரித்திருப்­பது குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வரன் கடுமை­யான அதி­ருப்­தி­யையும் வெளி­யிட்­டுள்ளார்.

குறிப்­பாக ஜனா­தி­ப­தியின் இச்செயற்­பா­டா­னது மனித உரி­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட அதற்கு எதி­ரான செயற்­பாடு எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றது. இக் கலந்­து­ரை­யா­டலைத் தொடர்ந்து ஊட­கங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் கருத்துத் தெரி­விக்கும் போது அவ­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது , புலிகள் இறந்து விட்­டார்கள் என்று அர­சாங்கம் கூறிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் அவ் அமைப்பில் அங்­கத்­த­வர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரங்­களைக் கொடுக்­காமல் விடு­வது மனித உரி­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட எதி­ரான ஒரு செயற்­பா­டாகும்.

அமைச்சர் சுவா­மி­நாதன் கொண்­டு­ வந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மா­னது மிகச் சரி­யா­ன­தாகும். அதற்­கேற்­ற­வாறு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கா­மை­யா­னது மிகவும் பிழை­யான ஒரு நட­வ­டிக்­கை­யாகும். இதே­போன்­று தான் நாம் இராணு­வத்தைக் காட்­டிக்­ கொ­டுக்­கப்­போ­கின்றோம் என்­றெல்லாம் கூறி­வ­ரு­கின்­றார்கள்.

ஆனால் உண்­மையில் இரா­ணு­வத்தில் பிழை­களைச் செய்­த­வர்­க­ளையே காட்­டிக்­கொ­டுக்­கு­மாறு நாம் கூறு­கின்றோம். அதற்­காக முழு இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுப்­பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல என்றார்.

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை மறுப்பது மனிதஉரிமை மீறல்! – முதலமைச்சர் காட்டம்