எடுபிடிகளையும், டயர் நக்கிகளையுமே மொட்டு கட்சி வைத்திருக்கின்றது?. சஜித்துடன் இருப்பதே எடுபடும் கட்சிகள்’ – மனோகனேசன்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்துள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுபிடி வேலை செய்யும் கட்சிகளாகும்.” (சிரிப்புடன்) சினிமா பாணியில் டயர் நக்கிகளும் உண்டு– என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் நேறு தெரிவித்தார்.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சிகள் எடுபடாதக் கட்சிகளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மக்கள் மத்தியில் எடுபடும் கட்சிகளே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்துள்ளது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!