பொதுத்தேர்தலில் இருந்து விலக தயார் – அரவிந்தகுமார் விடுத்துள்ள அதிரடி சவால்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடந்த நான்கு வருடங்களாக என்னால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளுக்கு மேல், இம் மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் எவராவது சேவையாற்றியிருப்பார்களேயானால், அவர்கள் அதனை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தால், வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து நான் வாபஸ் பெற தயாராகவுள்ளேன்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ. அரவிந்தகுமார் சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ. அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கடந்த நான்கு வருடங்களாகஇ மக்களுக்கு ஆற்றிய சேவைகள் அடங்கிய “விபரக்கொத்துப் பதிவேடு” பதுளை ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் அம்பாள் சன்னிதியில் வைத்து வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.

அதையடுத்து அவர் இன்று ஊடகவியலாளர் சந்திபொன்றையும் மேற்கொண்டிருந்தார். அச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்,

” நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நான்கு வருடங்களாகஇஎன்னால் இயன்ற வரையில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட எமது மக்களுக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டுள்ளேன். அச் சேவைகள் குறித்து பத்திரிகை வடிவில் வடிவமைக்கப்பட்ட 24 பக்கங்களைக் கொண்டு “விபரக்கொத்துப் பதிவேடு” ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

இச் சேவைகளை அரச மற்றும் அரச சார்பற்ற வகையிலும் எனது குடும்பத்தினர் மூலமாகவும் எனது தனிப்பட்ட வகையிலும் மேற்கொண்டிருக்கின்றேன்.இவற்றினை எவரும் சவால்களுக்கு உட்படுத்தி விட முடியாது.

பதுளை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றுடனான தமிழ் வேட்பாளர்கள் எவராவது என்னால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளைவிட கூடுதலாக செய்திருப்பார்களேயானால் அவர்கள் அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அவ்வகையில் நிரூபிப்பார்களேயானால் தேர்தல் போட்டியிலிருந்து நான் வாபஸ் பெறவும் தயாராகவுள்ளேன்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!