தமிழகத்தை உலுக்கிய இரட்டைக்கொலை: பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள்! – வெளிவரும் முக்கிய தகவல்கள்.

தமிழகத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கில், அதில் ஒருவருக்கு பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். பொலிசார் அவர்களை மிகவும் மோசமாக தாக்கியதே, அவர்களின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவர்கள் வைத்திருக்கும் செல்போன் கடையில் செல்போன் தராத ஆத்திரத்தில் குறிப்பிட்ட சில பொலிசார் இந்த செயலில் ஈடுபட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்களின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நெல்லை சிபிசிஐடி அதிகாரி இன்றே விசாரணை தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தற்போது பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்தற்கான அடையாளங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

பெண்னிக்ஸின் பின்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறியதற்கான ஆதாரங்கள் வெளியாகியது. பென்னிக்ஸ் உடல் கொண்டு வரும் போது அவரை கிடத்தியிருந்த போர்வையில் ரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!