புனாவையில் தடம் புரண்டது கடுகதி ரயில்! – வடக்கு ரயில் சேவைகள் பாதிப்பு.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று காலை தடம் புரண்டதால் வட பகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.50 மணியளவில் வவுனியா ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயில், காலை 6.15 மணியளவில் புனாவை பகுதியில் தடம் புரண்டது.

இரண்டு கிலோமீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பயணிகளுக்கோ ரயிலுக்கோ எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.

எனினும் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

தடம் புரண்ட பெட்டிகளை புனாவை ரயில் நிலையத்தில் விட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!