இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது: பிரதமர் மோடி!

எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இருந்து இந்தியா மீண்டு வரும் என்பது வரலாறு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மக்களின் சுகாதார நலனை போல பொருளாதார நிலையிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. வேளாண் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீடுக்கு உகந்ததாக உள்ளன. இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கொரோனா நோய்க்கு எதிராக இந்தியா ஒரு வலுவான போரை நடத்தி வருகிறது. இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும். பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!