கொரோனா பீதியால் முடக்கப்பட்டது கிளிநொச்சி வளாகம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கிளிநொச்சி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்றுமுன்தினம் மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இங்கு பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிவரும் ஒரு இராணுவ வீரராவார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.அந்தத் தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!