கிளிநொச்சி வளாகத்தில் தடை நீடிக்கும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பின்னரே வளாகம் திறக்கப்படும் என்று வளாகத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு இன்றும் எவரும் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பிரதிப் பதிவாளர், பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இராணுவச் சிப்பாயாகக் கடமையாற்றினார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கல்வி கற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!