இலங்கைக்குள் குதிக்க முயலும் இந்திய கொரோனா தொற்றாளர்கள்?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்த­­­ நிலையில், கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவிலிருந்து மன்னார் எல்லையைத் தாண்டி இலங்கைக்குள் வர எத்தணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, கடற்படையின் மூத்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்புடன் , மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மற்றும் தலை மன்னார் கடல் எல்லைகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்படுவது தொடர்பாகக் கடற்படை அதிகாரிகளால் மேற்கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றியவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு, இந்தியாவிலிருந்து மன்னார் கடல் மார்க்கமாக எவரும் நாட்டிற்குள் நுழையாதபடி தடுக்க அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்தியர்கள் ` என்ற மாறுவேடத்தில் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதால், இது தொடர்பாகப் பிரதேச செயலாளர்கள் ஊடாக மன்னார் மீனவர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என பொலிஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாகக் கலந்துரையாடலில் ஈட்டுப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!