அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றால் என்னால் மக்களுக்கு பயனில்லை- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச?

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அபிவிருத்தித்திட்டங்களால் பயனில்லை எனவும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றால், பல எதிர்ப்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்த தன்னாலும் நாட்டு மக்களுக்கு பயனில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நகர மற்றும் கிராமிய மக்களின் தேவைகள் நிறைவேறும் வகையிலான நிர்மாணித்துறையின் புரட்சியில் இணையுங்கள்.

நிலத்திற்கும் பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

குளங்கள் மற்றும் நீர்பாசன கட்டமைப்புகள் செயலிழந்துள்ளன. கிராமிய வீதி கட்டமைப்பு அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்கும் போது இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது.

நிர்மாணத்துறையில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ள புரட்சியின் போதும் உள்நாட்டு பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

வரலாற்றில் மிகவும் புகழ்மிக்க பொறியியலாளர்கள் உருவாகி யுகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!