தேர்தலுக்கு முன் என்னை சிறைக்குள் தள்ள முயற்சி – இவ்வாறு சொல்கிறார் ரிஷாட்

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, ஷஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகலில் இன்று (22) தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“ஷஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி, சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும் இறைவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!