பிரித்தானியாவில் கொடூரம்: 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த பெண்!

பிரித்தானியாவில் தனது எட்டு மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் ஒரு பெண். லண்டனின் Wembleyயிலுள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்தபோது, ஒரு எட்டு மாதக் குழந்தை கழுத்தறுபட்டுக் கிடந்துள்ளது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று மட்டும் கூறிய பொலிசார், மேலதிக தகவல்களை வெளியிடமுடியாது என்று கூறிவிட்டனர்.

ஆனால், விசாரணைக்கு வந்த பெண் பொலிசார் ஒருவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் Ilona Sidorova (45) என்ற பெண் காபி தயாரித்துக் கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் பொலிசார், Ilonaவிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி, அந்த வீட்டில் வசித்துவரும் ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, தன் கணவனை அழைத்து, உன் குழந்தையைக் கொன்று விட்டேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

கருப்பு உடை அணிந்திருந்த ஒரு பெண்ணை பொலிசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், அந்த பெண், பொலிசாரைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் Ilona. சற்று தொலைவில் ஒரு ஆண் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்திக்கொண்டிருந்ததையும், அவரை பொலிசார் காரில் ஏற்றியதோடு, அந்த பெண்ணையும் காரில் ஏற்றிச்சென்றதாகவும் Ilona தெரிவித்துள்ளார். தற்போது தடயவியல் நிபுணர்கள் அந்த வீட்டில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!