”அயம் நொட் டீலர்… அயேம் ஹ லீடர்” – மனோ கணேசனின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

அயம் நொட் டீலர்… அயேம் ஹ லீடர்” என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைப்பேசி சின்னத்தில் 7ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னால் அமைச்சர் மனோ கணேசனின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

நேற்று (24) திகதி இரத்மலானையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை சந்தித்து பேசிய அவர் தெரிவிக்கையில், 2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது என்னுடைய ஒருங்கிணைப்பாளர் என்னை இந்த தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரசொன்னார் அப்போது நான் அதை மறுத்துவிட்டு அவரிடம் சொன்னேன் இந்த தொகுதிக்கு என்னுடைய சேவை இன்னும் போய்ச்சேரவில்லை ஆதலால் அவர்களிடம் வாக்கு கேற்பது சரியில்லை என சொல்லிவிடேன் வாக்கு கேற்கவும் வரவில்லை.

நான் பராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டப்பின் என்னுடைய திட்டத்தில் முதல் கட்டமாக இந்த தொகுதிக்கு வந்தேன் இங்கே அனைவரும் என் சகோதரத்துவ மொழியை சேர்ந்தவரகளாக இருந்தீர்கள் அப்போது நான் உங்களுக்கு இங்கே என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றது என கேட்டேன் அனைவரும் ஒருமித்த குரலாக இரண்டு பிரச்சனைகளை தெரிவித்தீர்கள் அடுத்த 2 மாத காலத்துக்குள் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கி அந்த திட்டத்தை நிறைவேற்றிக்கொடுத்தேன் அதற்கு பிறகு பல சேவைகளை இந்த தொகுதிக்கு செய்துவிட்டேன். சேவை செய்த பின்னரே இம்முறை இந்த தொகுதிக்கு நான் வாக்கு கேட்கவந்தேன் என சொல்லிமுடிக்கும்போதே பலத்த ஆரவாரம் செய்தானர்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இன மத பேதமின்றி எல்லா மாவட்டங்களுக்கும் பல சேவைகளை செய்திருக்கின்றேன் அதை நான் ஏற்கனவே சொன்ன விடயத்தில் இருந்து தெரிந்திருக்கும் இனி வரும் காலப்பகுதிக்கு நான் என்ன செய்யப்போகின்றேன் என உங்களின் தேவைகளை நன்கு அறிந்தே அதை செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!