முன்னாள் போராளிக்கு கிடைத்த 75 இலட்சம் ரூபாவை பிடுங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலி போராளியிடம் இருந்து இவ்வாறே பரிசுத் தொகையில் பாதி தொகையை பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளார்.

குறித்த நபர் 2016ம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் 20 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் பொலிஸ் போதை பொருள் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இவ்வாறு சாதகமான தகவல் வழங்கியமை காரணமாக இலங்கை சுங்க பிரிவு தகவல் வழங்கிய நபருக்கும் இரண்டு கோடியே 75 இலட்சம் ரூபாயை பரிசாக வழக்கியுள்ளது.

அதில் 75 இலட்சம் ரூபாவினை பொலிஸ் பரிசோதகர் தாரக சுபோத என்பவர் கடனாக பெற்றுக் கொண்டதாக குறித்த தகவல் வழங்கிய நபர் முறைப்பாடு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!