சற்றுமுன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 115 பேர் நீக்கம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் மேலும் 54 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவது என அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த 61 பிரதிநிதிகளையும் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 97 பேரை ஏற்கனவே அந்த கட்சியில் இருந்து நீக்க செயற்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவ்வாறு நீக்கப்பட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அங்கம் வகித்த மிக முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

இந்த நிலையில் மேலும் 115 பேர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!