பொதுத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசியல் கட்சிகள் 514 மில்லியன் ரூபா செலவு

பொதுத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக கடந்த ஜூலை 2ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் கட்சிகள் 514 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் சீ.எம்.இ.வி என்ற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி ஜூலை 2 முதல் 15 வரையான இரண்டு வாரக் காலப் பகுதியில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 184 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன 151 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடகப்பிரச்சாரங்களுக்காக 168 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 107 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி 26 மில்லியன் ரூபாவையும், அபே ஜனபல பக்சய 13 மில்லியன்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 5 மில்லியன் ரூபாவையும் தமது பிரச்சாரங்களுக்காக செலவிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!