நீதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு அவசியம்! – அரச அதிபர் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளன, இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலில் பங்குபற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிகள் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு மற்றும் வலய தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், விசேடமாக சுகாதார நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்குரிய பயிற்சிகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ஆளணி கட்டுப்பாடு, போக்குவரத்து, மண்டப ஒழுங்கு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பொது வசதிகள் போன்ற சகல நடவடிக்கைகளும் அனேகமாக பூரணப் படுத்தப்பட்டு விட்டன தற்போது இறுதி கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!