இனி ஊடக சந்திப்பு இல்லை! – விடைபெற்றார் மஹிந்த.

ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று முடிந்த பின்னர், நடத்தி ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இது நான் பணியாற்றும் இறுதி தேர்தலாகும். உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன். 37 ஆண்டுகள் நான் இங்கு பணியாற்றியுள்ளேன்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நான் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைந்தேன். 1984ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். நான் இந்த ஆணைக்குழுவில் செய்யாத பணிகள் இல்லை. வாக்குப் பெட்டிகளையும் சுமந்துள்ளேன். அனைவருக்கும் மிக்க நன்றி! நான் மீண்டும் இந்த இடத்திலிருந்து ஊடக சந்திப்பை மேற்கொள்ளமாட்டேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!