பெய்ரூட் துறைமுக வெடி விபத்து: உதவ முன்வந்த பிரித்தானியா!

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக வெடி விபத்து காரணமாக நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், பிரித்தானியா மானிதாபிமானமாக 5,000,000 பவுண்ட்டிற்கு தேவையான உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பெலபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு 30 நிமிடத்தில் ஒட்டு மொத்த தலைநகரையே இந்த வெடி விபத்து கதிகலங்க வைத்துவிட்டது.

இன்னும் 100-க்கும் மேற்பட்டோரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெடிவிபத்தால் 3-5 பில்லியன் டொலர் பொருட்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக பெய்ரூட் ஆளுநர் தெரிவித்துள்ளதால், உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன் பிரான்ஸ் இந்த பயங்கர வெடி விபத்தில் காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சையளிக்க 15 டன் சுகாதார உபகரணங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை ஆகியவற்றுடன் லெபனானுக்கு இரண்டு இராணுவ விமானங்களை பிரான்ஸ் அனுப்பும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது பிரித்தானியா, மானிதாபிமானமாக 5,000,000 பவுண்ட்டிற்கு தேவையான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு செயலாளர் Dominic Raab, உதவித் தொகுப்பின் விவரங்களை தெரிவித்தார். அதில் தேடல், மீட்பு உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுணத்துவ மருத்துவ உதவி ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டார். மேலும், நாங்கள் லெபனான் மக்களுக்கு அவர்களின் தேவைப்படும் நேரத்தில் நிற்கப் போகிறோம்; தேடல் மற்றும் மீட்பு, 5,000,000 பவுண்ட் வரை மனிதாபிமான உதவி மற்றும் நிபுணர் மருத்துவ உதவியை நாங்கள் உடனடியாக வழங்குவோம்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்த அல்லது காயமடைந்த பிரித்தானிய நாட்டினரி எண்ணிக்கை இன்னும் உறுதியாக கூற முடியவில்லை. அடுத்த சில நாட்களில் இது குறித்து தெரிந்துவிடும். வெளிப்படையாக எங்களிடம் ஒரு தூதரகக் குழு உள்ளது, அவை மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகின்றன. லெபனான் மக்கள் இந்த வெடி விபத்திற்கு தகுதியற்றவர்கள் என்று நான் நினைப்பதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!