முன்னணியின் தேசியப் பட்டியல் கஜேந்திரனுக்கு!

நேற்றிரவு இடம்பெற்ற பொதுத் குழு கூட்டத்தில் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், மத்தியகுழு உறுப்பினர்களின் ஆதரவுடன், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை தேசியப் பட்டியலூடாக நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!