கோவிட்-19: ஒரே நாளில் 1,100 பேர் பலி – 64 ஆயிரம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அசுர வேகம் எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 55 ஆயிரத்து 79 பேருக்கு தொற்று பதிவானது. ஆனால் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 64 ஆயிரத்து 531 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் 8 லட்சத்து ஆயிரத்து 518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு அதிகரித்து இருக்கிறது என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் நேற்றுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1,092 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய அம்சமாகவே தென்படுகிறது. இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இறப்புவிகிதம் என்பது 1.91 சதவீதமாக சரிவு அடைந்துள்ளது.

நேற்று 1,092 பேர் பலியானதில், மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 422 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 139 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது அதிக எண்ணிக்கையை தமிழகம் கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களை, யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில் ஆந்திராவில் 88 பேரும், உத்தரபிரதேசத்தில் 70 பேரும், மேற்கு வங்காளத்தில் 55 பேரும், பஞ்சாப்பில் 35 பேரும், குஜராத்தில் 20 பேரும், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 13 பேரும், டெல்லி, ஜார்கண்டில் தலா 12 பேரும், ராஜஸ்தானில் 11 பேரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

ஒடிசாவிலும், புதுச்சேரியிலும் தலா 9, பீகார், சத்தீஷ்கார், தெலுங்கானாவில் தலா 8, அரியானாவில் 7, அசாம், கேரளா, உத்தரகாண்டில் தலா 6, கோவாவில் 5, லடாக், திரிபுராவில் தலா 3, அந்தமான் நிகோபாரிலும், சிக்கிமிலும், மணிப்பூரிலும் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ள 52 ஆயிரத்து 889 பேரில் மராட்டியம் முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு 20 ஆயிரத்து 687 பேர் பலியாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளது. 3-ம் இடம் வகிக்கிற டெல்லியில் 4,226 பேர் இறந்து உள்ளனர்.

பிற மாநிலங்களில் கர்நாடகத்தில் 4,201, குஜராத், ஆந்திராவில் தலா 2,820, உத்தரபிரதேசத்தில் 2,585, மேற்கு வங்காளத்தில் 2,528, மத்திய பிரதேசத்தில் 1,141 பேர் கொரோனாவால் மரணம் அடைந்து உள்ளனர்.

ராஜஸ்தானிலும், பஞ்சாப்பிலும் தலா 898 பேரும், தெலுங்கானாவில் 719 பேரும், ஜம்மு காஷ்மீரில் 561 பேரும், அரியானாவில் 557 பேரும், பீகாரில் 476 பேரும், ஒடிசாவில் 362 பேரும், ஜார்கண்டில் 262 பேரும், அசாமில் 203 பேரும், கேரளாவில் 175 பேரும், உத்தரகாண்டில் 164 பேரும், சத்தீஷ்காரில் 158 பேரும், புதுச்சேரியில் 123 பேரும், கோவாவில் 116 பேரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

100-க்கும் கீழாக பலியை சந்தித்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் திரிபுரா, சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், மணிப்பூர், லடாக், நாகாலாந்து, மேகாலயா, அருணாசலபிரதேசம், தத்ரா நகர் ஹவேலி, தாமன், தியு மற்றும் சிக்கிம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (56.62 லட்சம்), பிரேசில் (34.11 லட்சம்), இந்தியா (27.67 லட்சம்), ரஷியா (9.37 லட்சம்), தென் ஆப்பிரிக்கா (5.92 லட்சம்), பெரு (5.49 லட்சம்), மெக்சிகோ (5.31 லட்சம்), கொலம்பியா (4.89 லட்சம்) சிலி (3.88 லட்சம்), ஸ்பெயின் (3.64 லட்சம்) நீடிக்கின்றன. இறப்பில் முதல் 3 இடங்களை அமெரிக்கா (1.75 லட்சம்), பிரேசில் (1.10 லட்சம்), மெக்சிகோ (57 ஆயிரத்து 774) ஆகிய நாடுகள் வகிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!