பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோள்

அரசியல் பேதங்களை கைவிட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார்.

9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

இதில் பிரதம உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´நாட்டு மக்கள் அமைச்சர்களை கட்டிக்காக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் அவசியம் என்றே அவர்கள் விரும்புகின்றனர். எனவே, சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட வேண்டியதே தேவை. 1977 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் பழமையான அரசியல் யாப்பே நாட்டில் உள்ளது. ஆகவே, அந்த யாப்பு வெகு விரைவில் மாற்றப்பட வேண்டும். ஆகவே, மக்கள் கோரும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு அரசியல் பேதங்களை அனைவரும் புறந்தள்ளி செயற்பட வேண்டும்.´ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!