கொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றாக நீங்கி விடவில்லை என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் இதுவரையில் சமூகத்துக்குள் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் அதற்கான அச்சுறுத்தலை நிராகரித்து விட முடியாது. இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்கிறது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்களே தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். எனினும், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், அச்சுறுத்தல் முற்றாக நீங்கி விட்டதாக அலட்சியமாக இருக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!