ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

உள்ளூர் உருளைக்கிழக்கின் உற்பத்தியை அதிகரிக்கும் வழிவகைகள் ஆராயப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் உருளைக்கிழங்கின் இறக்குமதியை குறைத்து நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய ஊக்கம் வழங்கப்படவேண்டும் என்று கோட்டாபய கேட்டுள்ளார்.

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 250,000 தொன் உருளைக்கிழங்குக்கு கேள்வி உள்ளது. எனினும் நாட்டில் 80ஆயிரம் தொன் உருளைக்கிழங்கே உற்பத்தி செய்யப்படுகிறது.

நெல் மற்றும் தானிய உற்பத்தி தொடர்பான ராஜங்க அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தவிடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!