அரச ஊழியரின் சம்பளத்தில் கைவைப்பதை விட வேறு வழியில்லை!

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும், ஓய்வூதிய கொடுப்பனவுகளை குறைப்பதை தவிர அரசாங்கத்துக்கு வேறுவழியில்லை என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசமூலதன செலவீனங்களுக்காக அரசாங்கம் அரச சொத்துக்களை விற்கவேண்டிய நிலையேற்படலாம். தற்போதைய பொருளாதார நெருக்கடி கொவிட் 19 காரணமாக ஏற்படவில்லை. அரசாங்கத்தின் பிழையான வரிக்கொள்கையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் .

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திடம் மூலதன செலவீனங்களுக்கான தேவையான நிதி வலிமை இல்லாததன் காரணமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியளிக்கப் போவதில்லை

2010 முதல் 2014 வரை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன்பெற்றதை போல இம்முறை அரசாங்கத்தினால் கடன்பெறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!